சொந்தங்களும் உறவுகளும் எதற்காக?
சொந்தங்களும் உறவுகளும் எதற்காக? மனிதன் கூட்டமாக இருப்பதை விடவும் தனிமையில் இருக்கும் பொழுது இன்னும் நிம்மதியாகவும் அமைதியாகவும் உணர்வான். ஆனாலும் மனிதன் தன் வாழ்க்கையில் அனுபவிக்கும் இன்பங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளும் போது, அது இரட்டிப்பாகிறது. அவனது வாழ்க்கையில் அவன் சந்திக்கும் துன்பங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளும் போது, அது பாதியாகக் குறைகிறது.
அதனால், சொந்தம், பந்தம், உறவும், நட்பும், என்று பல்வேறு உறவுகளை மனிதர்களின் இன்ப துன்பங்களை பகிர்ந்துக் கொள்வதற்காக, மேலும் சேர்ந்து இன்பங்களை அனுபவிப்பதற்காக இறைவன் உருவாக்கி உள்ளார்.
